காதல் வயப்பட்டவர் நினைக்கிறார் தன்னுடைய காதலி இல்லாமல் உற்சாகத்தை இழக்க நேரிடும், மன ஊக்கத்தை இழந்து தனிமையில் வாடும்படி ஆகுமென்று. உண்மையில் காதல் கொள்வதற்கு முன்பே அவையெல்லாம் இருந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் அவர் அனுபவித்திருக்கிறார். காதல், அது உங்கள் மன வெறுமையைத் தற்காலியமாய் மூடி மறைக்க உதவிகிறது. ஒரு நபரின் மூலம் தனிமையில் இருந்து நீங்கள் தப்பிக்கிறீர்கள். உங்கள் செயலை மூடி மறைக்க அந்த நபரைப் பயன்படுத்துகிறீர்கள். உங்களுடைய பிரச்சனை இந்தப் தொடர்பு பற்றியதல்ல. உங்களது மன வெறுமையை பற்றியது. தப்புதல் என்பது ஆபத்தானது. காரணம் உங்ளுக்குள் அன்பு இல்லை. அது வெளியில் இருந்து வந்து உங்களை நிரப்பும் என்று தேடிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த அன்பற்ற நிலைதான் உங்களைத் தனிமைத் துயரிலாழ்த்தி விரிகிறது.
பெற்றோர்களிடம் அல்லது ஒரு குறிப்பிட்ட வேலையில் நாம் பத்திரமாய் உணர்வோம். நம்முடைய சிந்திக்கிற முறையில், வாழும் முறையில், விசயங்களை ஆராந்து பார்க்கும் விததில் திருப்தி அடைவோம்.
உங்களுடைய குருவும், பெற்றோர்களும் ஒரு குறிப்பிட்ட விதத்தில் சிந்திக்கும்படி உங்களைப் பழக்கியிருக்கிறார்கள். இப்படி நடந்து கொள்ள வேண்டும் இன்னின்ன நம்பிக்கைகளை வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் பயிற்றுவிக்கப்பட்டிருகீற்கள். பிரச்சினை பற்றி சுயமாகச் சிந்திகவும், வாழ்க்கையின் கோருதல் எதிர்கொள்ளவும் அஞ்சுகிறீர்கள். அந்தப் பயத்தில் அபத்தமாய், அலங்கோலமாய் எதையாவது செய்து வைப்பீர்கள்.
அடுத்தவரை சார்ந்திராத போது தனித்துவிடப்பட்டதாய் உணர்வீர்கள், சார்ந்து இருக்கும் போது அச்சம் வந்துவிடுகிறது. எங்கே அச்சம்ம் இருக்கிறதோ அங்கே அன்பு இருக்காது. உங்களிடம் அன்பு இருந்தால் நீங்கள் தனித்திருப்பதிலை.
யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி
1 comment:
உண்மை, அன்பு இருக்குமிடத்தில் பயம் இருப்பதில்லை.
அருமையான வரிகள் - உண்மை பேசும் வரிகள்.
Post a Comment