Saturday, September 29, 2007

ஜென்னின் முக்கியத்துவம்....

ஜென்,ஓர் அதி அற்புதமான வளர்ச்சி. அதைப் போன்ற ஓர் தன்மை, எப்பொழுதாவதுதான் நடைமுறைக்கு வரும்.

புத்தர், மஹாவீரர், திலோப்பா, கோரக், கபீர் போன்றவர்கள், பல நூற்றாண்டுகளாக, எப்படி இந்தப் பிறப்பு இறப்பு சக்கரத்திலிருந்து தப்புவது என்பது பற்றியே சிந்தித்துப் போதனைகளைச் செய்தார்கள். எப்படித் தன்னைத் தானே சுற்றி வருவது, தன்னுள்ளே செல்லுவது, எப்படித் எல்லா உறவுகளிலிருந்தும் முழுவதுமாக விடுபடுவது, எப்படி எதன் மேலும் பற்று இல்லாமல் இருப்பது, எப்படி வெளியை மறந்து உள்ளே செல்லுவது என்பது பற்றியே ஆராந்தார்கள். இந்த மனங்களின் சூழ்நிலைதான், ஜென் விதை இந்தியாவில் உண்டாகல் காரணமாயிற்று.

ஜென் என்றால் 'தியான்' என்று அர்த்தம். 'த்யான்' என்ற வார்த்தையே ஜப்பனிய மொழியில் 'ஜென்' என்று மருவி விட்டது. இந்திய பூர்ண விழிப்புத் தன்மையின் விளைவே 'தியானம்'. தியானம் என்றால் தனித்து, நீங்கள் உங்கள் உயிர்மைய நிலையில் இருப்பது என்பதாகும். அந்த நிலையில் எந்த ஒரு எண்ணமும் இருக்க கூடாது.

எது உங்கள் உள்மைய நிலையிலிருந்து வெளிப்படுகிறதோ, அதைப் பிறருக்கு விவரிக்க இயலாது. ஆனால், காட்ட முடியும் என்று ஜென் மக்கள் பொதுவாக சொல்லுவார்கள். அதேபோல, ஒரு சூழ்நிலையை உண்டாக்கி, அதன் அர்த்தத்தைக் குறிப்பால் உணர்த்த முடியும். ஆனால் வார்த்தைகளால் சொல்ல இயலாது. அதை ஒரு சிறு நிகழ்ச்சி வெளிப்படுத்தி விடும். ஜென் முழுக முழுக்கச் சிறு கதைகள், நிகழ்ச்சிகள், உதாரணங்கள் மூலமாகவே வளருகிறது.

குரு பொக்கூஜூவிடம், சிலர் வந்து, "நாங்கள் ஒவ்வொரு நாளும் உடை உடுத்தி கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் தான் இருக்கிறோம். இவற்றிலிருந்து எப்படி மீளுவது?" என்று கேட்கிறார்கள். பொக்கூஜூ, "நாங்கள் உடுத்துகிறோம், சாப்பிடுகிறோம்" என்று பதி சொல்லுகிறார். இந்தப் பதில் மிகவும் எளிமையானது. அதில் மிக மென்னையான் கருந்து இருக்கிறது. அதாவது, நாம் உடை உடுத்துகிறோம், சாப்பிடுகிறோம் என்றால், நம் முழுமையை அதனுடன் கலக்கிறோம். நம் எண்ணங்கள் அனைத்தும், எதைச் செய்கிறீகளோ, அதிலேயே இலயித்து இருக்க வேண்டும். அப்படி ஒருவர் சாப்பிடும் போது சாப்பிடுபவர் மறைந்து விடுகிறார். சாப்பிடுவது மட்டும் நடை பெறும். ஆகவே அதிலிருத்து எப்படி வெளிவருவது என்று இப்பொழுது யார் கேட்கிறார்கள்? உங்கள் மனம் அந்தச் செய்கையிலிருந்து பிரிந்து நிற்கும்பொழுது, அந்த மனம்தான் இந்த்க் கேள்வியை எழுப்புகிறது.

- ஓஷோ