Thursday, September 28, 2006

கவித்துளிகள்..

வேதனை......

கொதியாய் கொதிக்குது இதயம்
விதியின் சதியில் மாட்டியதால்
நித்தம் நித்தம் பல கனவு
முத்தம் தருமா ஒரு வசந்தம்

உலவறிந்த பின் உலகை வெறுத்தேன்
பாவம் என்ற கல்லறைக்குள் பலியானேன்
விதி செல்லும் வேகம் தடுக்கஒரு
கருவியை எங்கெங்கே தேட....?

நீண்டதோர் பயணம் கொள்ளபாதை
முழுவதும் முற்களின் கோலங்கள்.
துடிப்புக்கு புரியவில்லை தினம் தினம் ஏக்கங்கள்
நடிப்பக்கு புரியவில்லை நம்பிக்கையின் உருவங்கள்
பகலில் சிரித்து இரவில் விழியோடு...
செல்லும் நீர்தலையனையை குழிப்பாட்ட
தேடல் கொண்டு தேடேன்
இனி தொலைந்து போன வசந்தத்தை.


சுமை

எரித்திடும் வார்த்தைகளை
சுமப்பதை விட..
என் உடலை
எரித்துவிட்டால்..
இந்தப்பூமிக்கும்..
சுமையில்லாத
சுகமாகிவிடும்

Tuesday, September 12, 2006

பிரம்மசரியம்...

பிரம்மசரியம் இது ஒரு கலை. திருமணம் புரியாமல் இருக்கும் அனைவரும் பிரம்மசரியத்தை கடைப்பிக்கிறார்கள் என்று அர்த்தம் ஆகாது, திருமணம் புரிந்தவர்கள் பிரம்மசரியத்தை கடைப்பிடிக்கலாகது என்றும் அர்த்தமும் ஆகாது. பிரம்மசரியம் என்பது ஒரு ஒழுக்கம். பிரம்மசரியத்திற்கு என்று கடைப்பிடிக்க வேண்டிய லட்சனங்கள் நிறைய உண்டு.



பிரம்மசரியம் என்பது ஒரு சொல் அல்ல அது ஒரு தொடர். பிரம்மசரியம் என்னும் தொடருக்கு கடவுள் தியானம், வேத அத்தியானம், வேத அத்தியானம் செய்பவனது ஒழுக்கம் எனப் பல பொருகள் உண்டு. உபநயன சமஸ்காரம் முடித்துக் கொண்டு, குருகுலத்தில் வசித்துக்கொண்டு வேத அத்தியானம் முதலியவற்றைப் பயில்பவன் முற்காலத்துப் பிரம்மசாரி எனப்பட்டது. அவனது ஒழுக்கம் பிரம்மசரியம் எனப்பட்டது. அவனது ஒழுக்கம் அதிகாலையில் எழுதல், குரு பணிவிடை முதலியனவாகப் பலவாயினும், அவற்றுள் விந்து சம்ரட்சண விரதமே பிரம்மசரியம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது.(விந்து உடலில் உள்ள ஏழு தாதுக்களில் ஒன்று; ஏழு தாதுக்களில் முக்கியமானது. இரத்தம், விந்து, கொழுப்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை என்பன ஏழு தாதுக்கள். நாம் உண்ணும் உணவு முதலில் அன்னரசமாகிப் பிறகு மற்ற தாதுக்களால மாறுகிறது. அறுபது துளி இரத்தம் ஒரு விந்துவாகிறது என்று மருந்துவ நூலார் கருந்து.)பிற்காலத்தில் விந்து சம்ரட்சண விரதமே பிரம்மசரியம் என்று பொருள் உருவாகிவட்டது.


பிரம்மசரியம் அதற்கு உண்டான ஒழுக்கங்களையும், நடைமுறையையும் இழந்து விட்டது இன்று. அது ஒரு செய்ய கூடாத காரியங்களில் ஒன்றாக பாவிக்கப்பட்டுள்ளது. பிரம்மசரியம் நல்லொழுக்கங்களின் கூட்டமைப்பு அதில் சில:
காலை சூரியனுக்கு முன் விழித்தெழுதல்
உடற் பயிற்சி செய்தல்
குளிர் நீரில் முழுகுதல்
சந்தியா வந்தனம்
உணவு நியமம்
மாலை, இடுப்பு வரை நீரில் குளித்தல்
காபி, காரம், அதிக புளி, மாமிசம் நீக்கல்
பகலில் உறங்காமை
காலை குளிர் நீர் குடித்தல்
உயர்ந்த நோக்கததோடு கூடிய தொண்டில் மூளையையும் முயற்சியையும் செலுத்துதல்


" தம்மை இகழ்ந்தமை தாம்பொற்ப்ப தன்றிமற்
றெம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வார்கொள் என்று
பரிவதுஉம் சான்றோர் கடன்."

'பிறர் தம்மை இகழும் போதும், தமக்கு தீங்கு செய்யும் போதும், அவற்றைப் பொற்ப்பதன்றியும், தம்மை இகழ்ந்த பாவத்தால் அவர் துன்பம் அனுபவிக்க நேருமே என்று அவர்பால் இரக்கமும் கொள்வர்.'