Sunday, August 13, 2006

சுயம்...

ஜெ. கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் இருந்து.....


"எல்லாருமே தங்களுக்காக அழுகிறார்கள்
தங்களுடைய அற்பத்தனமுள்ள
இழிவான சுயத்துக்காக...."

அனுபவமில்லாத மனம் எளிய மனம். அனுபவங்கள் கூடிவிட்டாலோ அது சிக்கல் நிறைந்ததாகி விடுகிறது. ஒவ்வொரு அனுபவமும் மனதில் ஒரு பக்தியை விட்டுச் செல்கிறது. அத்தகைய மனம் மாசற்ற பேரின்பத்தை ஒரு போதும் அறிவதில்லை.

காதல் வயப்பட்டவர் நினைக்கிறார் தன்னுடைய காதலி இல்லாவிட்டால் உற்சாகத்தை இழக்க நேரிடும். மன ஊக்கத்தை இழந்து தனிமையில் வாடும் படி ஆகுமென்று. உண்மையில் காதல் கொள்வதற்கு முன்பே அவையெல்லாம் இருந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் அவர் அனுபவித்திருக்கிறார். காதல், அது உங்கள் மன வெறுமையைத் தற்காலிகமாய் மூடி மறைக்க உதவுகிறது. ஒரு நபரின் மூலம் தனிமையில் இருந்து நீங்கள் தப்பிகிறீர்கள். உங்கள் செயலை மூடி மறைக்க அந்த நபரைப் பயன்படுத்திகிறீர்கள். உங்களுடைய பிரச்சனை இந்தத் தொடர்பு பற்றிதல்ல. உங்களது மன வெறுமை பற்றியது. தப்புதல் என்பது ஆபத்தானது, காரணம் உங்களுக்கு அன்பு இல்லை. அது வெளியில் இருந்து வந்து உங்களை நிரப்பும் என்று தேடிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த அன்பற்ற நிலைதான் உங்களைத் தனிமைத் துயரிலாத்தி விடுகிறது.

துன்பம், குழப்பம், வேதனை என்று எல்லாவற்றையும் கண்டிருந்தும் அறிந்திருந்தும் ஏன் அவற்றை ஏற்கிறோம். ஏன் அவற்றைச் சுமந்து கொண்டு போகிறோம்? இதிலிருந்து விடுபட வேறொருவரின் உதவியை எதிர்பார்க்கிறோமா? இது உள்ளார்ந்த பிரச்சனை, இதில் இன்னொருவர் உதவ முடியாது. நாம் தான் புரிந்து கொள்ளவேண்டும், தகர்த்தெறிய வேண்டும். அதை நாம் செய்யாவிடில் நம்முடைய கல்விக்கும் பட்டங்களுக்கும் அர்த்தமே இல்லை. இவற்றையெல்லாம் அடிப்படையில் நீங்கள் மாற்றாவிடில் உங்களுடைய ஆராய்ச்சி அறிவால் என்ன பயன்??????......

Wednesday, August 02, 2006

பெண் <=> சக்தி

"வெகுநாளைக்கு முன்பு மொழி நாகரீகம் வருவதற்கு முன்பு, உணவு நாகரீகம் வருவதற்கு முன்பு, உடைகளற்று மனிதர் திரிந்தபொழுது, வெட்கமின்றி விலங்குகளாக அலைந்தபொழுது பெண்தான் ஆளுமை செய்திருக்கிறாள்."

"எப்பொழுதெல்லாம் உயிர் வாழ்தல் கடினமாக இருக்கிறதோ, எப்பொழுதெல்லாம் உயிர் வாழ்தல் பற்றி மிகுந்த அக்கறை தேவைப்படுகிறதோ அப்பொழுது பெண்தான் முன்வந்து நிற்கிறாள். கடினமான விஷயங்களை அவளால்தான் தாங்க முடியும். வலி பொறுக்கவும், பதிலடி கொடுக்கவும் பெண்ணுக்கு இருக்கின்ற வேகம் ஆணுக்கு அப்போதும் இல்லை இப்போதும் இல்லை."

"ஆண் பெண் பேதங்கள் இது பற்றி யோசிக்கிறவர்களுக்கு இல்லாமல், இது ஒரு ஆராய்ச்சி என்று உட்கார்ந்து கொண்டால் உள்ளுக்குள்ளே சக்தி மிகுந்தவர் யார் என்பது நன்றாக புரிந்து போகும்."

"இயங்குவது சக்தி, இயக்கப்படுவது சிவம். இயக்குகிறதற்கு சக்தி என்று பெயர். சக்தி இயங்கி சிவத்தை நகர்த்தி சிவம் நகர சக்தி உருவாகிறது. நகரவைப்பதும் சக்தி - நகர்வதால் ஏற்படும் விளைவும் சக்தி. ஒரு கல் ஆண் - அதற்குள் அதை இறுக்க அந்தத் துகள்களை இறுக்கப்பிடித்து வைத்திருக்கும் சக்தி பெண்."

"அடக்கி வைத்தால் அழிந்து விடுமோ அல்லது சீறி எழுமோ என்று பயந்து அவளை போற்றியும் வைத்தார்கள். அடைக்கப்பட்ட சக்தியை போற்றி வழிபடுவதுதான் சாக்தம். அடங்காத சக்தி முன்பு எந்த வழிபாடும் எடுபடாது. வழிபட வேண்டிய அவசியமில்லை."

இது எல்லாம் "வெகுநாளைக்கு முன்பு மொழி நாகரீகம் வருவதற்கு முன்பு....."