Sunday, July 16, 2006

குட்டி குட்டி கதைகள்

கடிகாரத்துக்கு ஓய்வா?

ஒரு பழைய பண்ணை வீட்டின் வரவேற்பறையில் ஒரு பழைய தாத்தாக் கடிகாரம் - தரையில் நிருத்திவைக்கப் பட்டிருக்கும் பெரிய கடிகார வகை - இருந்தது. நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தடவை கூட தன்னுடைய 'டிக், டிக்' ஓசை நிற்காமல் சரியாக மணி காட்டிக் கொண்டு வந்த கடிகாரம் அது.

ஒவ்வொரு நாளும் விழித்தெழுந்து மாடியிலிருந்து கீழே வந்ததும் அந்த விவசாயி முதல் வேலையாகக் கடிகாரத்திடம் போய் அது சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார். ஒரு நாள் காலையில் வழக்கம் போல் அவர் வரவேற்பறைக்கு போனபோது கடிகாரம் இவ்வாறு பேசத் தொடங்கியது.

" ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேலாக நான் நிற்காமல் வேலை செய்து கொண்டும் சரியான நேரம் காட்டிக் கொண்டும் வந்திருக்கிறேன். நான் இப்போது களைத்தும் போய் விட்டேன், நான் ஓய்வு பெருவதற்குத் தகுதியுடையவன் ஆகவில்லையா?"

" எனதருமைக் கடிகாரமே, உன்னுடைய முறையீட்டில் நியாயமில்லை, ஒவ்வொரு ' டிக்' குக்கும், பிறகு நீ ஒரு விநாடி ஓய்வெடுத்துக் கொள்வதை மறந்துவிட்டய் போலும்" என்றான் அந்தப் புத்திக் கூர்மையுடைய விவசாயி.

கணநேரம் சிந்தித்துன் பார்துவிட்டுக் கடிகாரம் மீண்டும் முன்போலவே வேலை செய்யத் தொடங்கிவ்ட்டது.

நம்முடைய கடமையிலேயே ஓய்வும் இருக்கிறது !

- ஸ்ரீ அன்னை

No comments: