Friday, June 16, 2006

மனமது செம்மையானால்...

மனம் என்றால் என்ன என்று உற்று பார்க்கும் போது, மனம் என்பது உடம்புக்குள் இருக்கின்ற உணர்வுகளின் கூட்டமைப்பு. உடம்பில்லாத இடத்தில் மனம் இல்லை. மனம் உடம்போடு தொடர்புடையது. உடம்பு எதோடு தொடர்புடையது என்று ஆராய்ந்தார்கள் ஞானிகள். அது பஞ்ச பூதங்களால் ஆனது. இந்த பஞ்ச பூதங்கள்தான் உடம்பின் இயக்கத்துக்கு காரணம். உடம்பில் ரத்தம், தசை, பிராணனன், கணச்சுடு, வெற்றிடம் இவை அனைத்தும் பஞ்சபூதங்களாக போற்ற படுகின்றன. இந்த ஐந்தும் வேலை செய்வதால்தான் மனம் என்ற ஒன்று உருவாகிறது.

புத்தி தன் அணுக்களில் அனைத்தையும் நியாபகத்தில் வைத்து கொள்ளகிறது. மனம் அந்த நியாபகத்தை தன் திறனுக்கு ஏற்ப கற்பனை செய்கிறது. "மனதின் ஆட்டம்தான் வாழ்க்கை, அதாவது கற்பனைகளின் கூட்டம்தான் வாழ்க்கை" என்பது ஞானிகளின் கறுத்து். இவர் நல்லவர், இவர் கேட்டவர், இந்த வார்த்தை சொன்னால் எனக்கு கோபம் வரும், எனக்கு இது பிடிக்காது, நான் அழகாக இருக்கிறேன் என்பவை அனைத்தும் கற்பனையே.. இந்த மனதின் மாயையில்தான் வாழ்க்கை ஓடுகிறது என்பது அறிந்தோர் வாக்கு. தான் அழகாக இருக்கிறோம், இந்த பெண் தனக்கு வேண்டும். எந்த பெண் அழகு எல்லாரும் ரத்தமும், சதையும் கலந்த மலமூத்திரதாரிகள்தானே? எந்த வாழ்க்கை நிரந்தரம்? எல்லாம் அழியகூடிய ஒன்று தான். எது சந்தோஷம்? எல்லாம் காணாமல் போக வேண்டியது தான். அனைத்தும் மனதின் கற்பனையே.. இருந்தலும் மனம் எதையோ தேடி அலைந்து கொண்டுதான் இருக்கிறது. தான் நினைத்து நடந்து விட்டால் அதை சந்தோஷம் என்று கற்பனை செய்கிறது, நடக்கவில்லையென்றால் துக்கம் என்று கற்பனை செய்கிறது. தான் நினைத்து நடத்து விட்டால், அடுத்து ஒன்றை தேட தொடங்கிவிடுகிறது. இடைவிடாது அலைகிறது. மனம் திருப்தியாவதே இல்லை. இதுவே மனதின் இயல்பாக கருதபடுகிறது. எது மனதின் இயல்போ அதுவே மனிதனின் இயல்பு. மனிதனின் இயல்பு இடைவிடாது சுகத்தை தேடி அலைவது. இதில், மனிதன் இந்த சுகத்தை அடைவதற்கு தன் வாழ்க்கை முழுதும் எப்படியேல்லாம் அவஸ்தை படவேண்டுமோ, எப்படியேல்லாம் அவமானபடவேண்டுமோ அது அனைத்தையும் பட்டுகொண்டே இருக்கிறான்.

இப்படி ஆட்டிப்படைகும் மனதை தன் வசப்படுத்ததான் நமது முன்னோர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்தார்கள். அதில் ஒன்றுதான் பிராணனை உற்று நோக்குவது, பிராணனை கட்டுப்படுத்துதல். இதற்கென்று ஒரு நியமத்தை ஏற்ப்படுத்தி அதை 'பிராணாயாமம்' என்று அழைத்தார்கள். மனதை வசப்படுத்த இதுவும் ஒரு வழி, இது போல் பல வழிகள் உள்ளன.

பதினென் சித்தர்களில் ஒருவராக கருதப்படும் 'அகத்திய மாமுனி'-யின் பாடல் ஒன்று:

"மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவைவுயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே..."

மனிதன் என்றும் மனதிற்க்கு அடிமையே...

2 comments:

சுபா காரைக்குடி said...

மனிதன் என்றும் மனதிற்கு அடிமையே !!

ரொம்ப நல்லா இருக்கு !!!

Suresh said...

உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி...