"ஒரு மூன்றாவது மனிதரின் நடத்தையோ, குணமோ, செய்கையோ உங்களைப் பாதிக்காதபடி பார்த்துக்கொள்வதுதான் முதலாவது தடுப்பு நடவடிக்கை. இன்னொருவரின் நடத்தை உங்களை ஆட்டிப் படைக்க ஒருபோதும் இடம் தரக்கூடாது. ஒருவன் உங்களுக்குக் கோபம் வரும்படி செய்கிறானென்றால் அவன் உங்களை ஜெயித்துவிட்டான், உங்களை அடிமைப்படுத்திவிட்டான் என்று அர்த்தம். 'நீ என்ன என்னை அடக்குவது?' என்று மனசுக்குள் நினைத்துகொள்ளுங்கள்.ஒரு நபரின் சினத்தால் அவர் மீது வெறுப்பு ஏற்பட்டால், அவர்மீது எரிச்சல் உண்டானால், உங்கள் சக்தி விணாகிறது. மாறாக, உங்களிடம் அப்படியொரு குறை இருக்கிறதா என்று ஆராய்ந்து பாருங்கள்."
அப்படைப்பில் உள்ள சில தலைப்புகள்:
- நான் ஏன் என்னயே எல்லோரும் கவனிக்க வேண்டுமென ஏங்குகிறேன்?
- நான் ஏன் சிலநாள் குஷியாகவும் சிலநாள் வெறுப்பாகவும் இருக்கிறேன்?
- நான் ஏன் அதை சாப்பிடுகிறேன்?
- நான் ஏன் மற்றவர்களுக்காகப் பாடுபடுகிறேன் என் வீட்டுக்காகப் பாடுபடுவதில்லை?
- நான் ஏன் எப்போதும் டி.வி பார்க்கிறேன்?
- நான் ஏன் முடிவுசெய்ய முடியாமல் திணறுகிறேன்?
- நான் ஏன் யாரோ என்னைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள் என்று பயப்படுகிறேன்?
- நான் ஏன் எதையும் முழுதாக முடிக்காமல் அரைகுறையாகச் செய்கிறேன்?
- நான் ஏன் எப்போதும் மற்றவர்களின் அபிப்பிராயத்தை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்?
- நான் ஏன் எந்த பொறுப்பு தந்தாலும் தட்டிக்கழிக்கிறேன்?
- நான் ஏன் நல்லவனாக இருந்தும் கெட்டபெயர் வாங்குகிறேன்?
- நான் ஏன் ஸிம்பிளான விஷயத்தைக்கூட சிக்கலாக்கிறேன்?
- நான் ஏன் சிலபேரைக் கண்டால் எரிச்சல் அடைகிறேன்?
- நான் ஏன் எதையாவது கைதவறி வைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கிறேன்?
- நான் ஏன் எப்போது பார்த்தாலும் சோம்பேறியாக இருக்கிறேன்?
- நான் ஏன் பிரியமானவர்களுக்கு ஏதோ நேரிடும் என்று பயப்படுகிறேன்?
- நான் ஏன் எப்பொழுதும் கண்ணாடி முன் நின்றுகொண்டிருக்கிறேன்?
- நான் ஏன் எந்த வேலையிலும் முழுகவனம் செழுத்துவதில்லை?
- நான் ஏன் என்னிடம் எப்பொழுதும் குறை காண்கிறேன்?
- நான் ஏன் பிறரிடம் உதவிகேட்க கூச்சப்படுகிறேன்?
- நான் ஏன் எப்பொழுதும் தனியாகவே இருக்க விரும்புகிறேன்?
-- ரா.கி.ரங்கராஜன்
No comments:
Post a Comment