"சமூகப் பொறப்பு!'... இன்னொரு வார்த்தை. 'ஜனநானயகம்'.. கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன வார்த்தைகள். இந்த வார்த்தைகளின் நாதத்தில் மயங்கி, நானே என்னை ஏமாற்றிக் கொள்ளும் பருவத்தை நான் தாண்டிவிட்டேன். இதில் இரண்டு நிலைகள் உண்டு. முதலில் தன்னைத்தனே ஏமாற்றிக் கொள்வது.. தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமொன்ற உணர்வு வந்த பின், இந்த வார்த்தைகளைக் கொண்டே பிறரை ஏமாற்ற ஆரம்பிப்பது இரண்டாவது நிலை.. இந்தக் காலத்து அரசியல்வாதிகள், புத்திசாலிகள். தொடங்கும் போதே இரண்டாவது நிலையில்தான் தொடங்குகிறார்கள்.
-----------
இதுதான் தமிழ்நாட்டுப் பண்பு போலிருக்கிறது. எதையும் அவநம்பிக்கையோடு அணுக ஆரம்பித்து, பிறகு மனச் சமாதானமடைந்தால் நம்பிக்கை கொள்வது.. எதையும் அவநம்பிக்கையோடு அணுக ஆரம்பித்து, பிறகு மனச்சமாதானமடைவது, நம்பிக்கையோடு அணுக ஆரம்பிப்பது, பிறகு ஏமாற்றமடைவதைக் காட்டிலும், வரவேற்கத்தக்கது.. இது ஒருவருக்கு மனோதத்துவ விபத்துக்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும்.."---------
ஒருவன், மற்றவர்களுக்கு மனச்சாட்சித் தொந்தரவு ஏற்படும் வகையில், நல்லவனாக இருந்தால், அவனுக்குச் சிறிது அதிகாரத்தைக் கொடுத்தால் போதும், அவனை அடியோடு கெடுத்து விடுவதற்கு.----------
அநுபாவத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஒருவர் இன்னொருவனை அநுதாபத்தின் காரணமாகப் புரிந்து கொள்ள முயல்கின்றான் என்றால், தன் நியாய உணர்வை ஓரளவு சமரஸப்படுத்திக் கொள்ள முயல்கின்றான் என்றுதான் அர்த்தம்.. நியாய உணர்வு என்பது நிர்தாட்சண்யமானது.. செண்டிமெண்டுகளுக்கு இதில் இடமில்லை.."