Wednesday, October 18, 2006

தற்கொலை..! - ?

இன்றைய நூற்றாண்டின் சிந்தனைவாதியான மார்ஸெல், தற்கொலை மட்டுமே பிரச்சனைக்கு வழியெனக் கூறியுள்ளார். வாழ்க்கை அருத்தமற்றது என்றாகிவிடும்போது என்ன தான் மிஞ்சி நிற்கிறது?ஏன் இதனை இழுத்துச் செல்ல வேண்டும்? ஏன் வாழ வேண்டும்?

அருத்தமற்ற இந்த வாழ்க்கையில் சக்கரம் போன்று நீ சுழன்று கொண்டுருக்கிறாய். காலையில் எழுகிறாய், வேலைக்குச் செல்கிறாய், எதோ சம்பாதிக்கிறாய், இரவு வருகிறது, படுக்கைக்குச் செல்கிறாய், கனவு காண்கிறாய், மீண்டும் காலையில் எழுகிறாய்... இவ்வாறு உன் காலச்சக்கரம் சுழல்கிறது. ஆனால் நீ எங்கும் போய் சேர்வதில்லை. கடைசியில் மரணம் வந்து உன்னை ஆட்கொள்கிறது. எனவே இதற்காக ஏன் காத்திருக்க வேண்டும்? தற்கொலை ஏன் செய்து கொள்ளல் கூடாது? இந்த அருத்தமற்ற பொருளை ஏன் அழித்துக் கொள்ளக்கூடாது? இத்தனை கவலைகளையும் இந்த அருத்தமற்ற வாழ்க்கைக்காக ஏன் சுமக்க வேண்டும்? இது வாதத்திற்குரிய ஒரு முடிவு.

[உண்மையை தேட வேண்டியதில்லை]

படித்தது...

"மறந்து விடுதலும் ஓருவகைச் சுதந்திரம்தான்...!"

" ஒருவனை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அவன் என்ன சொல்கிறான் என்பதைக் கவனிக்காதீர்கள்! அவன் என்ன சொல்லாமல் விட்டுவிட்டான் என்பதைப் பற்றி யோசனை செய்யுங்கள்!"

"எப்போதுமே கவிதை உருவாவதற்க்கு தடைக் கல்லாக இருப்பது சிந்தனை!"

"காதலிக்கும் காதலனுக்கும் இடையே உள்ள ஒரு திரையே காதல்..!"

Monday, October 09, 2006

பாரதி -1

சென்றது மீளாது

சென்றதினி மீளாது மூடரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.


மனத்திற்குக் கட்டளை

பேயா யுழலுஞ் சிறுமனமே!
பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்;
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.


அன்னையை வேண்டுதல்

எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லவே எண்ணல் வேண்டும்,
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெளிந்த நல்லறிவு வேண்டும்,
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனியே போலே,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திட வேண்டும் அன்னாய்!