Sunday, July 23, 2006

கடவுள் என்பதை ..

கடவுள் என்பதை எளிதில் விளக்கிட முடியாது. எந்த மொழிக்கும் கடவுள் என்கிற விஷயத்தை விளக்கும் பலம் இல்லை. எந்த அனுபவத்தையும் சொல்ல மொழி ஒரு அளவே உபயோகப்படும். அனுபவித்தால்தான் கிரஹித்துக் கொள்ள முடியும். தேன் குடித்த அனுபவம் இரண்டு பேருக்கு இருந்தால் விளக்கி வார்த்தையாக்க முடியாது.

தேன் இனிப்பு பற்றி நான் அனுபவித்திருக்கிறேன். உங்கள் தேன் அனுபவம் எனக்கு புரிகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். சாதாரண உணவு விஷயமே மொழியால் பரிமாறப்பட முடியாமல் இருக்க, சூட்சுமத்தில் அறியும் கடவுள் அனுபவம் எப்படி பரிமாற முடியும்??

ஆனால் அப்படி வெளியிடச் செய்த விஷயம் தான் புராணங்கள், இதிகாசங்கள், இன்ன பிற கதைகள். இவை கடவுளை முழுமையாகச் சொல்வன அல்ல. ஆனால் மெல்ல வெளிச்சம் போட்டுக் காட்டுபவை. இருண்ட மனதில் விளக்கேற்றி வைப்பவை.

அந்த கதைகள் கடவுள் அல்ல, கை விளக்குகளே. அந்த விளக்கின் ஒளியால் கடவுளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

ராமாயணத்தின் மூலம் ராமர் யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ராமரை நகருக்குள் தேட வேண்டும். கிருஷ்ணர் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். ராமரும் கிருஷ்ணரும் உதாரணங்கள் தான். நீரில் தோன்றும் நிலவு பிம்பங்கள் தான். கைக்கு எட்டும் தூரத்தில் நிலவு பிம்பம் தெரிந்தாலும். நிலவு வெகுதூரத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

- எழுத்து சித்தர் ' பாலக்குமாரன்'

Tuesday, July 18, 2006

படித்ததில் சில..

"நீங்கள் பிறக்கும் பொழுது, மனமற்று , ஒரு யோகியாகவே பிறக்கிறீர்கள், அதேபோல் நீங்கள் இறக்கும் பொழுதும், மனமுற்று, ஒரு யோகியாகவே இறக்க வேண்டும்".
- ஓஷோ.

"100% அன்பு செய்,
100% உதவி செய்,
100% மதிப்பு செய்,
- இவை நீ உன் காதலுனுக்கோ காதலிக்கோ செய்வதை விட, முதலில் உனக்கு நீயே செய்வது எப்படி என்று தெரிந்து கொள். "
- ஸ்ரீ நித்யானந்தர்

"வெற்றியின் இரகசியங்களை வாழ்வின்
ஒவ்வொரு கணமும் கற்றுக் கொடுக்கிறது,
அதைக் கற்றுக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்."

- ஸ்ரீ நித்யானந்தர்

Sunday, July 16, 2006

பார்க்க வேண்டிய சிவதலங்கள்...

பஞ்சபூத சிவதலங்கள்:

1. காஞ்சிபுரம் - ப்ருத்திவி (நிலம்) ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்
2. திருவானக்கோயில் - அப்பு (நீர்) ஐம்புகேஸ்வரர் ஆலயம்
3. திருவண்ணாமலை - தேயு (தீ) அருணாசலேஸ்வரர் ஆலயம்
4. திருக்காளத்தி (கான ஹஸ்த்தி)- வாயு (காற்று) கானத்தீஸ்வரர்
5. சிதம்பரம் - (ஆகயம்) நடராஜர்

ஸப்த விடங்கர் * ஸ்தலங்கள்:

1. திருவாரூர் - (தியாகேசர்)
2. திருநள்ளாறு - (தர்ப்பாரண்யேஸ்வரர்) - நாகவிடங்கர் - நள மகாராஜாவுக்கு சனி தோசம் நீங்கிய பதி. (இங்கு சனி பகவானுக்கு சிறப்பு சன்னதி உள்ள்து)
3. நாகப்பட்டிணம் - (நாயாரோகணேஸ்வர்) - சுந்தரவிடங்கர்
4. திருக்காறாயில் - (காரவாசல்) (திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் இருந்து 12 கீமீ) - ஆதிவிடங்கர்
5. திருக்குவளை - (திருவாரூர்- வேதாரண்யம் சாலை) திருக்கோவில் (நாதஸ்வரர்) - அவனிவிடங்கர்
6. திருவாய்மூர் - (திருவாரூர்- வேதாரண்யம் சாலை எட்டு குடி சமீபம்) நீல விடங்கர்
7. வேதாரண்யம் - (திருமறைக்காடு - வேதங்களால் அனேக ஆண்டுகள் அடைக்கப்பட்ட கோயில் கதவு, தேவாரம் பதிகந்தால் திறக்கப்பட்டது) - ஈஸ்வரன் வேதாரண்யர் - புவனிவிடங்கர்

* விடங்கர் - உளியால் செய்யப்படாத எனப் பொருள்.

குட்டி குட்டி கதைகள்

கடிகாரத்துக்கு ஓய்வா?

ஒரு பழைய பண்ணை வீட்டின் வரவேற்பறையில் ஒரு பழைய தாத்தாக் கடிகாரம் - தரையில் நிருத்திவைக்கப் பட்டிருக்கும் பெரிய கடிகார வகை - இருந்தது. நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தடவை கூட தன்னுடைய 'டிக், டிக்' ஓசை நிற்காமல் சரியாக மணி காட்டிக் கொண்டு வந்த கடிகாரம் அது.

ஒவ்வொரு நாளும் விழித்தெழுந்து மாடியிலிருந்து கீழே வந்ததும் அந்த விவசாயி முதல் வேலையாகக் கடிகாரத்திடம் போய் அது சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார். ஒரு நாள் காலையில் வழக்கம் போல் அவர் வரவேற்பறைக்கு போனபோது கடிகாரம் இவ்வாறு பேசத் தொடங்கியது.

" ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேலாக நான் நிற்காமல் வேலை செய்து கொண்டும் சரியான நேரம் காட்டிக் கொண்டும் வந்திருக்கிறேன். நான் இப்போது களைத்தும் போய் விட்டேன், நான் ஓய்வு பெருவதற்குத் தகுதியுடையவன் ஆகவில்லையா?"

" எனதருமைக் கடிகாரமே, உன்னுடைய முறையீட்டில் நியாயமில்லை, ஒவ்வொரு ' டிக்' குக்கும், பிறகு நீ ஒரு விநாடி ஓய்வெடுத்துக் கொள்வதை மறந்துவிட்டய் போலும்" என்றான் அந்தப் புத்திக் கூர்மையுடைய விவசாயி.

கணநேரம் சிந்தித்துன் பார்துவிட்டுக் கடிகாரம் மீண்டும் முன்போலவே வேலை செய்யத் தொடங்கிவ்ட்டது.

நம்முடைய கடமையிலேயே ஓய்வும் இருக்கிறது !

- ஸ்ரீ அன்னை